பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண்
* எலிசபெத் மகாராணியால் பிரித்தானிய பிரதமரை பதவி நீக்கம் கூட செய்ய முடியும்.
* பாஸ்போர்ட் இல்லாமல் சர்வதேச பயணம் செய்யமுடியும்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு தற்போது 96 வயதாகிறது.
உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக மகாராணி திகழ்கிறார்.
வேறு யாரும் செய்ய முடியாத மற்றும் கனவிலும் நினைக்க முடியாத சில விடயங்களை மகாராணி மட்டும் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டலாம்
பொதுவாக ராணிக்கு ஒரு கார் ஓட்டுநர் இருப்பார், ஆனால் எப்போதாவது அவர் காரை இயக்கவும் செய்வார். நாட்டிலேயே ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கக்கூடிய ஒரே நபர் மகாராணி தான்.

GETTY
பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியும்
மகாராணி வாக்களிக்கவோ அல்லது அவரது அரசியல் கருத்துக்களை பகிரங்கமாக கூறவோ முடியாது என்றாலும், அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய நபராக பணியாற்றுகிறார். எலிசபெத்தால் பிரித்தானிய பிரதமரை பதவி நீக்க செய்ய முடியும்.
வருமான வரி
இரண்டாம் எலிசபெத் பிரித்தானியாவின் மகாராணி மட்டுமல்ல, அவர் நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவருக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் இல்லாமல் சர்வதேச பயணம்
அனைத்து பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுகளும் ராணியால் வழங்கப்படுவதால், அவரிடம் ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், இந்த உரிமையை அரச குடும்பத்தில் பெற்றுள்ள ஒரே நபர் மகாராணி தான்.

 Getty
இரண்டு பிறந்தநாட்கள்
மகாராணிக்கு மட்டும் ஆண்டிற்கு இரண்டு பிறந்தநாள் வருகிறது. அவரது உண்மையான பிறந்த நாள் ஏப்ரல் 21 அன்று தனிப்பட்ட முறையில் கொண்டாடப்படும் மற்றும் அரச பிறந்த நாள் ஜூன் மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று கொண்டாடப்படும்.
பல நாட்டின் நாணயங்களில் மகாராணி முகம்
உலகெங்கிலும் உள்ள 35 நாடுகளின் நாணயத்தில் ராணி எலிசபெத் படம் இடம்பெற்றுள்ளது.
போர்
மகாராணிக்கு உள்ள சிறப்பு அதிகாரங்கள் அவரால் போரையும் சமாதானத்தையும் அறிவிக்க முடியும் என்று கூறுகின்றன. அவர் ஆயுத மோதல்கள் உள்ள பகுதிக்கு துருப்புக்களை கூட அனுப்ப முடியும்.

GETTY IMAGES
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        