PPF Scheme: இந்த Post Office திட்டம் மூலம் கோடீஸ்வரர் ஆகலாம்
பாதுகாப்பான நிலையான வட்டி வருமானம் தரக்கூடிய திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பற்றி பார்க்கலாம்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் எந்த அளவுக்கு செலவு செய்கிறோமோ அதில் பாதி அளவையாவது சேமிக்க வேண்டும். அப்படி நாம் சேமிப்பதற்கு அரசு பல திட்டங்கள் அறிவித்துள்ளன.
அதில், நிலையான வட்டி தரும் திட்டமாகவும், பாதுகாப்பான திட்டமாகவும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது.
Public Provident Fund (PPF)
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முக்கியமான திட்டமாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.1 கோடி ரொக்கமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் 7.1% வட்டி கிடைக்கும்.
இதில் செய்யும் முதலீடுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி பிரிவின் கீழ் வரி சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நிதியாண்டில் நாம் குறைந்தபட்சம் ரூ.500 -லிருந்து ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதாவது, ஒரு நபர் ஆண்டுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
ரூ.1 கோடி ரொக்கம்
இந்த திட்டத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் முதலீட்டு தொகை ரூ. 22,50,000 இருக்கும்.
அதோடு, இந்த தொகைக்கு கூட்டு வட்டி முறையில் வட்டி தொகை ரூ.18,18,209 இருக்கும். இதன் மூலம் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.40 ,68,209 கிடைக்கும்.
இந்த முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். அதே போல அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 20 ஆண்டுகளுக்கான மொத்த முதலீடு ரூ.30,00,000 ஆகும். இதற்கான வட்டி ரூ.36,58,288 ஆகும். அதன்படி பார்த்தால் மொத்தம் ரூ.66,58,288 கிடைக்கும்.
இதே போல மேலும் இரண்டு முறை 5 ஆண்டுகளுக்கு முதலீட்டை நீட்டிக்க வேண்டும். அப்போது, மொத்தம் 30 ஆண்டுகளில் முதலீடு ரூ.37,50,000 ஆகவும், வட்டி ரூ.65,58,015 ஆகவும் இருக்கும். இதன்மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1.03 கோடி ரொக்கம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |