மூன்று இன்னிங்ஸ்களில் தலா ஐந்து விக்கெட்டுகள்! காலேவில் மிரட்டும் பிரபத் ஜெயசூரியா
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபத் ஜெயசூரியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேவில் நேற்று தொடங்கியது.
முதலில் ஆடிய இலங்கை அணி 222 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இலங்கை வீரர் பிரபத் ஜெயசூரியா, இந்த போட்டியிலும் பந்துவீச்சில் மிரட்டினார்.
PC: Twitter (@ICC)
ஷாபிக் 13 ஓட்டங்களிலும், அசார் அலி 3 ஓட்டங்களிலும் பிரபத் ஓவரில் வெளியேறினர். அக்ஹ சல்மான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோரை எல்.பி.டபள்யூ முறையில் வெளியேற்றிய பிரபத், முகமது நவஸையும் ஆட்டமிழக்க செய்தார்.
இதன்மூலம் இந்த இன்னிங்சில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரபத் ஜெயசூரியா தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸ்களில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டியுள்ளார்.
PC: Twitter (@cricketcomau)