தனது சுழலில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பிரபத் ஜெயசூர்யா! இலங்கை அணி வெளியிட்ட வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபத் ஜெயசூர்யாவின் வீடியோவை இலங்கை அணி நிர்வாக வெளியிட்டுள்ளது.
காலேவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் அறிமுக வீரர் பிரபத் ஜெயசூர்யா 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், இரண்டாவது இன்னிங்சில் சுழற்பந்துவீச்சில் மிரட்டினார். அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்சிலும் அவுஸ்திரேலியாவின் 6 வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
பிரபத் ஜெயசூர்யாவின் பந்துவீச்சு தொடர்பான வீடியோவை, இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Player of the Match Prabath Jayasuriya 6/59 spins Sri Lanka to incredible innings and 39-run win over Australia with record debut match haul of 12/177! ?#SLvAUS pic.twitter.com/BESwOo1OHQ
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 11, 2022