இலங்கை வீரர் பிரபத் ஜெயசூரியாவின் மிரட்டல் பந்துவீச்சு! சீட்டுக்கட்டாய் வீழ்ந்த விக்கெட்டுகளின் வீடியோ
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபத் ஜெயசூரியா 3 டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமிக்க வைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதன் மூலம் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் இருந்தது. இரு அணியிலும் சுழற்பந்து வீச்சர்கள் விக்கெட்டுகளை அள்ளினர். குறிப்பாக இலங்கை அணியில் பிரபத் ஜெயசூரியா முதல் டெஸ்டில் 9 விக்கெட்டுகளையும், இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அவரது பந்துவீச்சு இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை நான்கு முறை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
The architect of Sri Lanka's 246-run win - Prabath Jayasuriya
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 28, 2022
In just six Test innings, he has accumulated 29 wickets, including four five-wicket hauls and a 10-wicket match-haul. #SLvPAK pic.twitter.com/1hHl40xNCz
மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பிரபத் ஜெயசூரியா 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், தனது அறிமுக டெஸ்ட்டிலேயே 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
PC: Ishara S Kodikara / AFP