அறிமுக டெஸ்டிலேயே மூன்று விக்கெட்! அவுஸ்திரேலியாவை கலங்கடித்த இலங்கை வீரர்
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபத் ஜெயசூரியா, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
கலேவில் இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
முதல் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்கள் எடுத்துள்ளது. லபுஸ்சாக்னே 104 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் 109 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 16 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
PC: Twitter (@OfficialSLC)
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் பிரபத் ஜெயசூரியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
PC: AFP
அவரது பந்துவீச்சில் லபுஸ்சாக்னே ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் போல்டானார். அடுத்ததாக கேமரூன் கிரீன் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.