இலங்கை கொடுத்த மரண அடி! பிரபத் ஜெயசூர்யா சுழலில் சிக்கி பாலோஆன் ஆகிய அயர்லாந்து
இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் அயர்லாந்து அணி பாலோஆன் ஆகிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கியுள்ளது.
இலங்கை அணி டிக்ளேர்
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 591 குவித்து டிக்ளேர் செய்ததைத் தொடர்ந்து, அயர்லாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
விஷ்வா பெர்னாண்டோவின் மிரட்டலான பந்துவீச்சில் முர்ரே கம்மின்ஸ், பால்பிரினி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய டெக்டர் தொடக்க வீரர் ஜேம்ஸ் மெக்கல்லம் உடன் இணைந்து ஓட்டங்களை சேர்த்தார்.
@cricketireland
பிரபத் ஜெயசூர்யா மிரட்டல் பந்துவீச்சு
அப்போது இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் பிரபத் ஜெயசூர்யாவின் சுழலில் அயர்லாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. டெக்டர் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், கேம்பர் ஓட்டங்கள் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்து ஜேம்ஸ் 35 ஓட்டங்களில் பிரபத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் டக்கர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்த நிலையில், ஏனைய வீரர்கள் பிரபத் ஜெயசூர்யாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
?? Prabath Jayasuriya's seven-wicket haul leaves Ireland stunned!#SLvIRE #LionsRoar pic.twitter.com/X9GwV2BqG2
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 18, 2023
அயர்லாந்து பாலோஆன்
இறுதியில் 143 ஓட்டங்களுக்கு அயர்லாந்து அணி ஆல்அவுட் ஆனது. டக்கர் அதிகபட்சமாக 45 ஓட்டங்கள் எடுத்தார். பிரபத் ஜெயசூர்யா 7 விக்கெட்டுகளும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
அயர்லாந்து அணி பாலோஆன் ஆனதால் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. விஷ்வா பெர்னாண்டோ மிரட்டலான பந்துவீச்சில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
Sri Lanka have enforced the follow-on after bowling Ireland out for 143 courtesy of a Prabath Jayasuriya seven-for ?#SLvIRE #LionsRoar pic.twitter.com/aQFuKzBZ0L
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 18, 2023
தற்போது அயர்லாந்து அணி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. ஜேம்ஸ் மெக்கல்லம், டெக்கர் இருவரும் களத்தில் உள்ளனர்.