ஐசிசியின் விருதை வென்ற இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்!
சூலை மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற ஐசிசியின் விருதை, இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபத் ஜெயசூரியா பெறுகிறார்.
இலங்கை அணியில் சமீபத்தில் அறிமுகமான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபத் ஜெயசூரியா, ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
அணியின் வெற்றிக்கு அவரது பந்துவீச்சு மிகப்பெரிய பங்களிப்பாக அமைந்தது. அவர் 3 டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இதில் 4 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், ஒரு முறை 10 விக்கெட்டுக்களை ஒரே டெஸ்டிலும் அவர் வீழ்த்தியிருக்கிறார்.
island.lk
இந்த நிலையில் ஒரு மாதத்தில் சிறப்பாக விளையாடி வீரருக்கு விருது அளித்து கௌரவிக்கும் ஐசிசி, சூலை மாதத்திற்கான சிறந்த வீரராக பிரபத் ஜெயசூரியாவை தெரிவு செய்துள்ளது.
Sri Lankan spinner Prabath Jayasuriya's sensational start to international cricket has been capped off by winning the ICC Men's Player of the Month award for July 2022!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 8, 2022
Congratulations! pic.twitter.com/Ix72JEtonZ