அவுஸ்திரேலியாவின் 'தலை'ஐ தூக்கிய இலங்கை வீரர்! பரபரப்பாக தொடங்கிய காலி டெஸ்ட்
காலியில் தொடங்கியுள்ள டெஸ்டில் இலங்கை வீரர் பிரபத் ஜெயசூரியா முக்கிய விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலியில் இன்று தொடங்கியுள்ளது.
உஸ்மான் கவாஜாவும், டிராவிஸ் ஹெட்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காட்டினர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக பவுண்டரிகளை விரட்டினார்.
அத்துடன் 35 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தார். ஆனால் அவரது வேகத்திற்கு இலங்கையின் பிரபத் ஜெயசூரியா முட்டுக்கட்டை போட்டார்.
அவரது பந்துவீச்சில் சண்டிமலிடம் கேட்ச் கொடுத்து டிராவிஸ் ஹெட் (Travis Head) ஆட்டமிழந்தார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் குவித்தார்.
முதல் நாளிலேயே எதிரணிக்கு அச்சுறுத்தலான வீரரான டிராவிஸ் ஹெட்டின் விக்கெட் வீழ்ந்தது இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |