பிரபாகரனின் மனைவி, மகள் உயிருடன் இருக்கின்றனர்! மறுக்கும் இலங்கை அரசு (வீடியோ உள்ளே)
பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் இருப்பதாக மதிவதினியின் சகோதரி என பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
போரில் உயிரிழப்பு
30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரானது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.
மேலும், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மனைவி, மகள், உறவினர்கள் ஆகியோர் இறுதி போரின் போது உயிரிழந்துவிட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்திருந்தது.
பரபரப்பு வீடியோ
இந்நிலையில், தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதினியின் சகோதரி என்று கூறிக்கொள்ளும் பெண் ஒருவர் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் இந்த வீடியோவில், "இலங்கை போரின் போது பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் இறந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால், அவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்தேன். மேலும், அவர்களுடன் பேசிவிட்டு உணவு அருந்தினேன். நான் இந்த செய்தியை என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இலங்கை மறுப்பு
தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியாவுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் நலின் ஹேரத்,"பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் இருப்பதாக பரவும் செய்தி போலியானது என்றும், மற்றவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த மாதிரி செயலில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |