பிரபல நடிகர் பிரபாஸின் வீட்டில் நிகழ்ந்த துயரம்! கண்ணீரில் தெலுங்கு திரையுலகம்
பிரபாஸுடன் பில்லா, ரிபெல், ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களில் கிரிஷ்ணம் ராஜு இணைந்து நடித்துள்ளார்
நடிகராக மட்டுமன்றி 12 படங்களையும் கிரிஷ்ணம் ராஜு தயாரித்துள்ளார்
மூத்த தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான கிரிஷ்ணம் ராஜூ இன்று காலமானார். தெலுங்கு சினிமா உலகில் ரிபெல் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் கிரிஷ்ணம் ராஜு.
பிரபல நடிகர் பிரபாஸின் பெரியப்பாவான இவர் மத்திய இணை அமைச்சராக வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தார். சிரஞ்சீவியின் கட்சியில் உறுப்பினராக இருந்த கிரிஷ்ணம் ராஜூ வில்லன், கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடம் என 190 படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கிரிஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

83 வயதான கிரிஷ்ணம் ராஜூ, 1998ஆம் ஆண்டில் காக்கிநாடாவில் எம்.பியாக வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.
