பிரப்சிம்ரன் சிங் சிக்ஸர் மழை! 56 பந்தில் 110 ஓட்டங்கள் விளாசல்
Prabhsimran Singh century against Batinda Royals: ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் ஜலந்தர் வாரியர்ஸ் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பதிந்தா ராயல்ஸ் அணிக்கு எதிரான ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில், ஜலந்தர் வாரியர்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பிரப்சிம்ரன் சிங்
ஜலந்தர் வாரியர்ஸ் மற்றும் பதிந்தா ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷேர்-இ-பஞ்சாப் டி20 போட்டி மொஹாலியில் நடந்தது.
Total TABAHI 🔥🔥
— FanCode (@FanCode) September 3, 2026
Catch all the Sher-E-Punjab T20 action LIVE on FanCode 📲#SherEPunjabT20 pic.twitter.com/PP4TMJeyRo
முதலில் களமிறங்கிய ஜலந்தர் வாரியர்ஸ் அணியில் விஸ்வநாத் சிங் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹர்ஜாஸ் (8), உமேஷ் (8) ஆகியோர் சொதப்ப, அணித்தலைவர் பிரப்சிம்ரன் சிங் (Prabhsimran Singh) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவருக்கு உறுதுணையாக அதிரடி காட்டிய ஆர்யன் யாதவ் 19 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் விளாசினார்.
த்ரில் வெற்றி
பிரப்சிம்ரன் சிங் 56 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்கள் விளாச, ஜலந்தர் வாரியர்ஸ் அணி 205 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் ஆடிய பதிந்தா ராயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுக்க, 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜலந்தர் வாரியர்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக உதய் சஹாரன் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்களும், ஹர்நூர் சிங் 29 பந்துகளில் 44 ஓட்டங்களும் விளாசினர். ரன்தீப் சிங் மற்றும் எமன்ஜோத் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |