50 வயதில் மீண்டும் தந்தையான நடிகர் பிரபுதேவா! வம்சத்தில் முதல் பெண் குழந்தை
பிரபல நடிகர் பிரபுதேவா பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
பிசியோதெரபிஸ்ட் உடன் காதல்
இந்திய அளவில் பிரபல நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா, நடிகை நயன்தாராவை பிரிந்த பின்னர் தனியாக வாழ்ந்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் மும்பையில் ஹிமானி சிங் என்ற பிசியோதெரபிஸ்ட் உடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
அதன் பின்னர் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பிரபுதேவா - ஹிமானி சிங் ஜோடி திருப்பதி கோயில் தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
மீண்டும் தந்தையான பிரபுதேவா
இந்நிலையில் பிரபுதேவா பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவா - ஹிமானி சிங் தம்பதிக்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பே குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் தற்போது தான் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை இதுதானாம்.
பிரபுதேவா மற்றும் அவரது சகோதரர்கள் ராஜூ சுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகிய மூவருக்கும் ஆண் பிள்ளைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.