பிரபல தமிழ் திரைப்பட நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்
பிரபல திரைப்பட நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர் பிரதாப் போத்தன் (70). இவர் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவருக்கும் நடிகை ராதிகாவுக்கும் கடந்த 1985ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கு அடுத்த ஆண்டே இருவரும் பிரிந்தனர்.
பின்னர் அமலா சத்யநாத் என்பவரை பிரதாப் போத்தன் மறுமணம் செய்த நிலையில் அவரை 2012ல் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார்.
அவர் காலமான செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.