முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட பிரதீப் ஆண்டனி: வனிதாவுக்கு பதிலடி கொடுத்தாரா?
நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக ஊடங்களில் தன்னை ஒரு நபர் தாக்கியதாகவும் இதனால் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததற்கு, பிரதீப் ஆண்டனி பதில் அளித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை வென்றவர் நடிகர் விஜயகுமார்.
இவர் 1995 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் இவர் பல பிரச்சினைகளுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்சியில் கலந்துக்கொண்டு மாஸ் காட்டினார்.
இதையடுத்து இவரது மூத்த மகளான ஜோவிகா 7 சீசனில் விளையாடிக்கொண்டு இருகிறார்.
இந்நிலையில் வனிதாவை அடையாளம் தெரியாத பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் தாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
வனிதாவை தாக்கிய பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்
"என்னுடைய பிக் பாஸ் விமர்சனத்தை முடித்தபின், இரவு உணவையும் முடித்துவிட்டு வீடு திரும்ப இருந்தேன். எனது காரை தங்கை சௌமியா வீட்டின் அருகே நிறுத்தி இருந்தேன். காரின் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்முன் வந்தார். அவர் பிக் பாஸ் பிரதீப்பின் ஆதரவாளர் ஆவார்" என தெரிவித்திருந்தார்.
தாக்கியவர், “ரெட் கார்ட்” கொடுக்குறீங்களா? அதுக்கு நீ சப்போர்ட் வேற..“என்று கூறியபடி முகத்தில் தாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் பிரதீப் ஆண்டனி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரதீப் ஆண்டனி வெளியிட்ட பதிவு
“எனது போட்டியாளர்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களுக்கு எதிராகவோ எனக்கு எந்த ஒரு விரோதமும் கிடையாது, நான் அவர்களுடன் ஒரு நல்ல முறையில் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெளிவாக தெரியவில்லை, ஆனால் உங்களுடைய இந்த நிலைக்கு நான் வருந்துகிறேன், நன்றாக ஓய்வெடுங்கள். ஜோவிக்க மிகவும் சாதுர்யமான பெண், இந்த போட்டியை வெல்லக்கூடிய சாமர்த்தியம் அவளிடம் உள்ளது. அவளுக்கு உங்கள் உதவி தேவையில்லை” என தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு பிரதீப் ஆண்டனி காரணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |