Biggboss ரீஎன்ட்ரிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதீப் ஆண்டனி
Biggboss இல்லத்திற்குள் பிரதீப் ஆண்டனி மீண்டும் வருவார் என பார்வையாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரதீப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பகிர்ந்திருக்கிறார்.
பிக் பாஸ் இல்லத்திற்குள் கடந்த வாரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை முன் வைத்து பிரதீப் மீது மாயா, ஜோவிகா, பூர்ணிமா, ஐஷூ ஆகியோர் குற்றம் சொல்ல அவருக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.
இதுமட்டுமல்லாமல், பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் பிரதீப்பைக் கொண்டு வரவேண்டும் எனவும் பார்வையாளர்கள் சொல்லி வந்தனர்.
பிரதீப்பை கமல்ஹாசன் சரியாக விசாரிக்கவில்லை எனச் சொல்லி அவருக்கு இணையத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் 'கேம் ஓவர்' என குறிப்பிட்டு பிரதீப் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Game over.
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 11, 2023
#RenduKaiRenduKaalIllanaKoodaKaalindravanPozhaichupaanSir #KettaPaiyanSirAvan #VaazhthiyaManagalukkuEnVaazhkaiyaiVazhangiVitten #NallaIrunga pic.twitter.com/zr86c3H7Bo
'கேம் ஓவர். ரெண்டு கை ரெண்டு கால் இல்லனா கூட காளின்றவன் பிழைச்சிப்பான் சார். கெட்ட பையன் சார் அவன். வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன்.
நல்லா இருங்க’ என பிரதீப் பதிவிட்டு இருக்கிறார். அதனால் பிரதீப் இனி பிக் பாஸ் வர போவது இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |