எல் நினோவால் தமிழ்நாட்டிற்கு 2 புயல்கள் - வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு
pradeep john predicts due to el nino tamilnadu get 2 cyclone: வடக்கு கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்த பருவ மழை எப்போது வரை இருக்கும், எல் நினோவின் தாக்கம் இதில் இருக்குமா என்பது குறித்த பல்வேறு தகவல்களை வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
எல் நினோவால் தமிழ்நாட்டிற்கு 2 புயல்கள்
அக்டோபர் 15 ஆம் திகதி முதல் மழை தொடங்கியுள்ளது. மேலடுக்கு சுழற்சியானது, தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை இருக்கிறது.

மேலும் வலுவடைந்து அரபிக் கடலுக்கு செல்கிறது. இதனால் 24 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருபதாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ அதிக மழைப்பொழிவு இருந்தால் அது மேகவெடிப்பாக கருதப்படுகிறது. அந்தவகையில், வடசென்னையின் ஒரு சில பகுதிகளில் மேகவெடிப் நிகழ்ந்ததாக கருதலாம்.
வடகிழக்கு பருவமழைக்கும், எல் நினோவிற்கும் ஒரு 35% தொடர்பிருக்கலாம். மத்தபடி எல் நினோ வந்தாலே பெரும் வெள்ளம் வந்துவிடும் என கிடையாது. கடந்த 100 ஆண்டுகளில் எல் நினோ ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இந்த ஆண்டும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக எல் நினோ ஆண்டுகளில் தென் தமிழகத்திற்கும் நல்ல மழை கிடைத்துள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு தென் தமிழகத்திற்கும் கனமழை பெய்யும்.
எல் நினோ ஆண்டுகளில் புயல் குறைவாகவே இருக்கும். வழக்கமாக வடக்கு கிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல் வந்தால், எல் நினோ ஆண்டுகளில் 2 புயல்கள் வர வாய்ப்புள்ளது. புயல்கள் வந்தால் சென்னைக்கு மட்டும் வரும் என்ற அவசியமில்லை.
நவம்பர் மாதத்தில், கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சராசரியை விட சற்று அதிக மழை இருக்கும்" என தெரிவித்துள்ளார்.