20 ரூபாய் செலுத்தினால் ரூ 2 லட்சம்! பயன்தரும் காப்பீடு திட்டம்
வெறும் 20 ரூபாய் செலுத்தினால் போதும், 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் காப்பீடு திட்டம் குறித்து இங்கே காண்போம்.
காப்பீடு திட்டம்
மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷகா பீமா யோஜனா எனும் விபத்துக்கான காப்பீடு திட்டம், எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பலன்களை வழங்குகிறது.
2015ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இத்திட்டமானது, ஒரு வருடத்திற்குள் தற்செயலான மரணம் மற்றும் இயலாமை பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
நபர் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டால், இத்திட்டத்தின் மூலம் 2 லட்சம் இன்சூரன்ஸ் குடும்பத்திற்கு வழங்கப்படும். அதேபோல் Total Disability காப்பீட்டின்படி, விபத்தில் கை அல்லது கால்கள் செயலிழந்துவிட்டாலும் ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.
மேலும், Partial Disability காப்பீட்டின்படி விபத்தில் ஒருவருக்கு ஒரு கண், ஒரு கை, ஒரு கால் செயலிழந்து இருந்தால் 1 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படும்.
20 ரூபாய் போதும்
18 வயது நிரம்பியவர்கள் முதல் 70 வயது உடையவர்கள் வரை இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதனை வருடந்தோறும் புதுப்பிக்கவும் முடியும்.
இந்த திட்டமானது வெறும் 20 ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதன் வருட சந்தா ரூ.436 மட்டுமே. ஆனாலும், வருடத்திற்கு ஒருமுறை பிரீமியம் தொகையை மாற்றுவார்கள்.
இந்த திட்டத்தில் முதிர்வு தொகையாக எதுவுமே கிடைக்காது. இந்த திட்டத்தை வங்கி அல்லது தபால் துறையில் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம்.
இதில் சேர விரும்புவோர் தபால் துறை மற்றும் வங்கியை அணுகலாம். SMS அல்லது Net Banking மூலம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் அதிகாரப்பூர்வ Website-களில் இருந்து விண்ணப்பங்களை Download செய்து, உங்கள் வங்கியாளரிடம் சமர்ப்பிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |