முதல் ஓவரிலேயே 3 விக்கெட் எடுத்த புதுமுகம்., சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அசத்தல் வெற்றி
IPL 2026-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தனது முதல் போட்டியை ஆடிய பிரபுல் ஹிங்கே (Praful Hinge), ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தனது முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷியை அவுட் செய்த பிரபுல் ஹிங்கே, மூன்றாவது பந்தில் த்ருவ் ஜுரேலையும், ஓவரின் கடைசி பந்தில் லுவாண்ட்ரே பிரிடோரியஸையும் அவுட் செய்தார்.
அடுத்த ஓவரில், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராகையும் வீழ்த்தி, தனது அறிமுக ஆட்டத்தை மறக்க முடியாததாக மாற்றினார்.

விதர்பாவைச் சேர்ந்த 24 வயது வலதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரபுல் ஹிங்கே, இதற்கு முன் 10 ஃபர்ஸ்ட்-கிளாஸ் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ரெட்-பால் கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை நிரூபித்த அவர், T20-இல் அதிக வாய்ப்புகள் பெறவில்லை. ஆனால் IPL-இல் கிடைத்த இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, IPL 2026 ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு ஹிஞ்சை வாங்கியது. அணியின் பந்துவீச்சு பிரிவில் வலிமையை கூட்டும் வகையில் அவர் தெரிவு செய்யப்பட்டார்.
Golden Duck for Vaibhav Suryavanshi.
— Johns. (@CricCrazyJohns) April 13, 2026
Two ball Duck for Dhruv Jurel.
Two ball Duck for Lhuan Dre Pretorius.
PRAFUL HINGE - ONE OF THE CRAZIEST DEBUT IN IPL HISTORY 🥹🧡
FIRST BOWLER EVER TO TAKE 3 WICKETS IN THE FIRST OVER OF AN IPL MATCH. pic.twitter.com/P4iVq3uz6o
தனது அறிமுக ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை எடுத்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த ஆட்டத்தில் SRH கேப்டன் இஷான் கிஷன் 91 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் SRH அணி 216 ஓட்டங்கள் எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ஓட்டங்களில் அவுட் ஆனதால், SRH 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |