நிலவில் சதம் அடித்த பிரக்யான் ரோவர்! புகைப்படம் வெளியிட்ட இஸ்ரோ
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்துவரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டருக்கு மேல் பயணித்து தொடர்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் 3 விண்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
அதன்படி, கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
இதன்பின், நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வரும் ரோவர், நிலவின் மேற்பரப்பில் இருந்த 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை முன்கூட்டியேஅறிந்து, அதனை தவிர்த்து சமதள பாதையில் சென்றது.
மேலும், நிலவில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மங்கனிசு, சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்தது.
இதனிடையே, பிரக்யான் ரோவரை விக்ரம் லேண்டர் தனது கேமரா மூலம் எடுத்த வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டது.
100 மீட்டர் கடந்த ரோவர்
இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்துவரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டருக்கு மேல் பயணித்து தொடர்ந்து வருகிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
இதனிடையே இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில்,"லேண்டரும், ரோவரும் நிலவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு சில நாள்களில் ரோவரை உறங்க வைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) September 2, 2023
?Pragyan 100*
Meanwhile, over the Moon, Pragan Rover has traversed over 100 meters and continuing. pic.twitter.com/J1jR3rP6CZ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |