நிலவில் லேண்டரை படம்பிடித்து அனுப்பிய பிரக்யான் ரோவர்! புகைப்படம் வெளியீடு
ஆய்வு செய்து கொண்டே விக்ரம் லேண்டரை படம்பிடித்து பிரக்யான் ரோவர் அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் -3 விண்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
அதன்படி, கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது. அதற்கான வீடியோவும் இஸ்ரோ வெளியிட்டது.
அதன்படி, நிலவின் மண்ணில் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வு செய்து வருகிறது.
லேண்டரை படம் பிடித்த பிரக்யான் ரோவர்
இதனைத்தொடர்ந்து, நிலவின் மேற்பரப்பில் இருந்த 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை முன்கூட்டியே அறிந்த ரோவர் அதனை தவிர்த்து சமதள பாதையில் சென்றது.
இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் இருந்து லேண்டர் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட chaSTE, ILSA ஆகிய கருவிகளின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
அதாவது, பிரக்யான் ரோவர் இன்று ஆய்வு செய்து கொண்டே, விக்ரம் லேண்டரை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படமானது ரோவரில் (NavCam) உள்ள நேவிகேஷன் கேமராவால் எடுக்கப்பட்டது.
இதில், chaSTE என்பது நிலப்பரப்பின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி ஆகும். ILSA என்பது கனிமங்களின் தன்மை மற்றும் அங்கு ஏற்படும் அதிர்வுகளை கண்டறியும் கருவி ஆகும்.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 30, 2023
Smile, please?!
Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.
The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).
NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |