இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்
bcci appoints Pragyan Ojha as chairman of indian cricket Men’s Selection Committee: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜாவை பிசிசிஐ நியமனம் செய்துள்ளது.
தேர்வுக்குழு தலைவரான பிரக்யான் ஓஜா
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக 2023 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் முன்னாள் வீரர் அஜித் அகர்கர்.

இவர் பதவி வகித்த காலகட்டத்தில் இந்திய அணி 3 ஐசிசி கிண்ணங்களையும், 2 ஆசியக் கிண்ண பட்டங்களையும், தொடர்ச்சியாக 2 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தங்கப் பதக்கங்களையும் வென்றது.
2026 அக்டோபர் 4 அன்று அஜித் அகர்கரின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், தேர்வுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 செப்டம்பரில் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங்குடன் ஆடவர் தேர்வுக் குழுவில் சேர்க்கப்பட்டா ஓஜா, தேர்வுக்குழுவில் உள்ள உறுப்பினர்களிடையே அதிக டெஸ்ட் அனுபவம் உள்ள காரணத்தால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
🚨 Announcement 🚨 Mr Ramesh Powar @imrameshpowar appointed to Men’s Selection Committee. Based on seniority (most Tests), Mr Pragyan Ojha @pragyanojha will chair the Committee. BCCI appreciates Mr Ajit Agarkar @imAagarkar for his commitment, conviction and contribution during his tenure as Chairman of the Committee. Details ▶️ https://t.co/z0jcyPWkr0 #TeamIndia
— BCCI (@BCCI) October 19, 2026
பிரக்யான் ஓஜா, 2009 முதல் 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
ரமேஷ் பவாருக்கு குழுவில் இடம்
மேலும், ஷிவ் சுந்தர் தாஸ், ஆர்.பி சிங், அஜய் ராத்ரா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ள தேர்வுக் குழுவில் முன்னாள் வீரர் ரமேஷ் பவாரும் புதிதாக உறுப்பினராக இணைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளிலும் 31 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள ரமேஷ் பவார், இந்திய மகளிர் அணி, மும்பை மற்றும் குஜராத் அணிகளின் தலைமைப் பயிற்சியாளர், பிசிசி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் பந்துவீச்சுப் பயிற்சியாளர் உட்பட முக்கியப் பயிற்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியுடன் இருந்த காலத்தில், அவர் அந்த அணியை ஆசியக் கிண்ணப் பட்டத்தையும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வெல்ல வழிநடத்தினார்.