ஓவர் கான்பிடன்சா இருக்காதீங்க... மும்பை அணியை எச்சரித்த இந்திய முன்னாள் வீரர்
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் மும்பை அணி அதீத நம்பிக்கையுடன் இருக்க வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், முன்னாள் ஐபிஎல் வீரரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான பிரக்யன் ஓஜா இந்த தொடர் குறித்து கூறுகையில், மும்பை அணி வழக்கம் போல இந்த தொடரிலும் போதிய பலம் வாய்ந்த அணியாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் அணியில் இருக்கும் வீரர்கள் சரியான பலத்திலேயே இருக்கின்றனர்.
இதன் காரணமாகவே கடந்த வருட ஏலத்தின் போது தேவையில்லாத எந்த வீரர்களையும் மும்பை அணி ஏலம் எடுக்கவில்லை. அணியின் எதிர்காலத்தை குறிப்பிட்டு சில வீரர்களை மட்டுமே எடுக்கப்பட்டனர்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் குறை சொல்ல முடியாத அளவிற்கு தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் அவர்கள் தங்களது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இருப்பினும் நான் மும்பை வீரர்களுக்கு சொல்வது என்னவென்றால் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அதிக அதீத நம்பிக்கையுடன் விளையாடக்கூடாது என்று கூறியுள்ளார்.