சித்தார்த்திற்கு இடைஞ்சல் கொடுத்ததை ஏற்க முடியாது: மன்னிப்பு கேட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்
கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையான செய்தியாளர்கள் சந்திப்பு
கர்நாடகாவில் காவிரி நதி நீர் தொடர்பான பிரச்சனையில் நடைபெற்று கொண்டு நிலையில், கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்ற நடிகர் சித்தார்த்தின் “சித்தா” படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கன்னட அமைப்பினர் புகுந்து நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறு தகராறில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கி சென்றதுடன், செய்தியாளர்கள் சந்திப்பு பாதியில் தடைப்பட்டது.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னட மக்கள் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
மன்னிப்பு கேட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் அப்படியே வைத்து இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை அழுத்தம் கொடுக்காத எம்.பிகளையும் கேள்வி கேட்பதற்கு பதிலாக சாதாரண மக்களையும், சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விஷயத்தில் ஒரு கன்னடராக மற்றும் அனைத்து கன்னட மக்களின் சார்பாக நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |