இதெல்லாம் பழைய ஸ்கிரிப்ட்.., ED சம்மனுக்கு கூலாக பதிலளித்த பிரகாஷ் ராஜ்
அமலாக்கத்துறை அளித்திருக்கும் நோட்டீஸுக்கு, மிரட்டுவதெல்லாம் பழைய ஸ்கிரிப்ட் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிர்ப்பு
நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜகாவிற்கு எதிராகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
குறிப்பாக அவர், மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார். தாம் இப்படி பேசி வருவதால் சக நடிகர்கள் கூட என்னுடன் பேசுவதில்லை என அவர் வேதனை தெரிவித்திருந்தார். இதற்கு, பல அரசியல் கட்சிகளும், மக்களும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
ED சம்மன்
இந்நிலையில் மத்திய பாஜக அரசு, பிரணவ் ஜூவல்லர்ஸ் பண மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜை சிக்க வைக்க பார்க்கிறது. இதனால், இந்த ஜூவல்லரி விளம்பரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த ஒரே காரணத்திற்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
STATUTORY WARNING:-
— Prakash Raj (@prakashraaj) November 25, 2023
Dear #Panauti
THREATENING is an Outdated script.. try something else #justasking
இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் எக்ஸ் தளத்தில், " 'பனாதி' என்ற வார்த்தையால் மோடியைக் குறிப்பிட்டு மிரட்டுவதெல்லாம் பழைய ஸ்கிரிப்ட். வேறு எதையாவது முயற்சி செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |