முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய மற்றோரு இலங்கை வீரர்: உற்சாகமாக வரவேற்ற மலிங்கா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இலங்கையின் பிரமோத் மதுஷன் என்ற வீரர் அறிமுகமானார்.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் பிரமோத் மதுஷன் என்ற வலக்கை வேகப்பந்து வீச்சாளர் இலங்கை அணிக்காக களமிறங்கியுள்ளார். தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாகும் அவருக்கு, இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா கைகொடுத்து உற்சாகமாக வரவேற்றார்.
Pramod Madushan received his ODI cap from Lasith Malinga! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 24, 2022
?? ODI ? 2️⃣0️⃣5️⃣#SLvAUS pic.twitter.com/cNHCdbupmy
இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடும் 205வது வீரர் என்ற சிறப்பை பிரமோத் மதுஷன் பெற்றார். 28வது வயதாகும் பிரமோத், 31 முதல்தர போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் 69 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.
இலங்கை அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில், இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டம் செய்து வருகிறது.
Photo Credit: Getty Images