இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம்! பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், இந்திய மூத்த தேர்வுக் குழு, நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்துள்ளது.
காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரசித், சுற்றுப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியுடன் பயிற்சி மற்றும் பயணம் செய்து வருகிறார் என பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
UPDATE - Prasidh Krishna added to India’s squad
— BCCI (@BCCI) September 1, 2021
More details here - https://t.co/Bun5KzLw9G #ENGvIND pic.twitter.com/IO4JWtmwnF
நான்காவது டெஸ்டுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, எம்.டி. சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
Arzan Nagwaswalla காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால் தொடர் சமனில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் செப்டம்பர் 2ம் தேதி முதல் லண்டனில் உள்ள ஓவலில் நடைபெறும்.