வாழ்க்கை என்பது.. இறப்பதற்கு முன் நடிகர் பிரதாப் போத்தனின் கடைசிப் பதிவு
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் இறப்பதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வாழ்க்கை குறித்த கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகர், இயக்குனராக வலம் வந்தவர் பிரதாப் போத்தன்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 70வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினம் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்க்கை குறித்த பல விடயங்களை பதிவிட்டிருந்தார்.

PC:Thulasi Kakkat
அவற்றில், சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள், என்னை பொறுத்தவரை அதை காதல் என்பேன் என ஏஏ மில்னேவின் வரிகளையும், தினமும் எச்சில்களை நீண்ட காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நாம் விழுங்குவதால்தான் மரணம் ஏற்படுகிறது என்ற ஜார்ஜ் கார்லின் வரிகளையும் குறிப்பிட்டிருந்தார்.

oneindia

oneindia
மேலும், வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணம் செலுத்துவது என்பது என்றும், சினிமா போன்ற கலைகள் எல்லாம் கலைஞர்கள் தங்களுடைய இருப்பை வெளியே காட்டிக்கொள்ள பயன்படுத்தும் ஊடகம் என்று ஜிம் மோரிசன் என்பவர் சொன்ன வரிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

oneindia

oneindia
இந்த பதிவுகளை அவர் வெளியிட்ட 12 மணிநேரத்திற்கு பின்பு மரணமடைந்திருக்கிறார். தற்போது அவரது பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.