சாதம், சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் இறால் நெய் வறுவல்: ரெசிபி இதோ
இறால் நெய் வறுவல் சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டிகளுடன் மிகவும் நன்றாக இருக்கும்.
இறால் கடல் உணவுகளிலே சுவையான உணவு மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்டிருக்கும்.
அட்டகாசமான சுவையில் இறால் நெய் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இறால்- 1kg
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சைப்பழம்- 1
- காய்ந்த மிளகாய்- 4 ஸ்பூன்
- கொத்தமல்லி- 5 ஸ்பூன்
- வெந்தயம்- 1/4 ஸ்பூன்
- கிராம்பு- 6
- சீரகம்- 1/4 ஸ்பூன்
- மிளகு- 1/2 ஸ்பூன்
- பூண்டு- 6 பல்
- நெய்- 5 ஸ்பூன்
- பட்டை- 1
- பிரியாணி இலை- 2
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- தயிர்- 1 கப்
- வெல்லம்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் ஒரு வாணலில் காய்ந்தமிளகாய், கொத்தமல்லி, கிராம்பு சீரகம், மிளகு சேர்த்து வறுத்து அதனோடு பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் 5 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பட்டை, பிரியாணி இலை, 3 கிராம்பு, சோம்பு சேர்த்து வறுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து அதில் எடுத்து வைத்துள்ள இறால் சேர்த்து வதக்கவும்.10 நிமிடம் வதக்கிய பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் தயிர், எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து கிளறினால் சுவையான இறால் நெய் வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |