எச்சில் ஊறும் சுவையில் இறால் நெய் வறுவல்.., எப்படி செய்வது?
இறால் நெய் வறுவல் சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டிகளுடன் மிகவும் நன்றாக இருக்கும்.
அட்டகாசமான சுவையில் இறால் நெய் வறுவல் எப்படி வறுவல் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இறால்- 1kg
- காஷ்மீரி மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- சீரக தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சை பழம்- ½
- சின்ன வெங்காயம்- 20
- பூண்டு- 8
- இஞ்சி- 2 துண்டு
- சோம்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 2 ஸ்பூன்
- வர மிளகாய்- 5
- நெய்- தேவையான அளவு
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 2 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து அதில் காஷ்மீரி மிளகாய் தூள், சீராக தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு, ஊறவைத்த வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும் அதில் ஊறவைத்து வைத்துள்ள இறாலை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
பின் அந்த இறாலை ஓரமாக நகர்த்தி நடுவில் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கி பின் இறாலுடன் சேர்த்து கிளறவும்.
இறால் நன்கு வெந்து வந்ததும் அதில் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து இறுதியில் கருவேப்பிலை தூவி இறக்கினால் இறால் தவா வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |