நாவூறும் சுவையில் இறால் தொக்கு செய்வது எப்படி?
அனைவரும் விரும்பி சாப்பிடும் கடல் உணவான இறாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில் கால்சியம், அயோடின் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன, அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது.
இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் என்பதால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இவ்வளவு நன்மை மிக்க இறாலில், சுவையான இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இந்த இறால் தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்ற அனைத்திற்கும் சூப்பரான காமினேஷன்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - சிறிதளவு
- சோம்பு - சிறிதளவு
- வெங்காயம் - 3
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- பச்சைமிளகாய் - 2
- கருவேப்பிலை - 1 கொத்து
- தக்காளி - 2
- மஞ்சள் தூள்
- சீராக தூள்
- கரம் மசாலா
- மல்லித்தூள்
- மிளகாய்த்தூள்
- மிளகுத்தூள்
- உப்பு - தேவையான அளவு
- இறால் - 1/2 கிலோ
- மிளகுத்தூள்
- கொத்தமல்லி இலை - தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் தேவயான அளவு எண்ணெய் ஊற்றி, என்னை காய்ந்தவுடன் சிறிதளவு கடுகு, சிறிதளவு சோம்பு சேர்த்து நன்கு பொரிந்தவுடன். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகிற அளவுக்கு வதக்கவேண்டும்.
பின் அதில் 2 பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பின் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் அளவிற்கு சீரகத்தூள், அரை டீஸ்பூன் அளவிற்கு கரம் மசாலா, 2 டீஸ்பூன் மல்லித்தூள், பின் கரத்துக்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின் அதில் 2 தக்காளியை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக்கொண்டு நன்றாக கிளறிய பின் எண்ணெய் பிரிந்து வரஅளவுக்கு மசாலாக்கலளின் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வேகவேண்டும்.
பின் சுத்தம் செய்துவைத்துள்ள அரை கிலோ இறாலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 8 லிருந்து 10 நிமிடம் வரை நன்றாக வேக வைக்க வேண்டும் .
கடைசியாக அதில் சிறிதளவு மிளகுப்பொடி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |