ரியல்மி எக்ஸ்7 சீரிஸின் வெளியீட்டு விவரம் இதோ!
புதிய ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த சீரிசில் ரியல்மி எக்ஸ்7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போதைய தகவலில் ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் வெளியீட்டு தேதி கொண்ட அழைப்பிதழ் ட்விட்டரில் வெளியாகி உள்ளது.
இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 6.4 இன்ச் ஸ்கிரீன், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா சென்சார், 32 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் இதன்படி படி பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ரியல்மி எக்ஸ7 மற்றும் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.