பிரித்தானியா வரும் பயணிகளுக்கான முக்கிய விதி ரத்தாகலாம்! கசிந்த முக்கிய தகவல்
பிரித்தனாயா வரும் பயணிகளுக்கான பயண விதிகளில், அரசாங்கம் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா அரசாங்கத்தின் பயண விதி மறுபரிசீலனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.
இதன்போது, பயணிகள் பிரித்தானியாவுக்கு புறப்படுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய கொரோனா பரிசோதனை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவத்துள்ளன.
பிரித்தானியாவில் தற்போது அமுலில் உள்ள விதியின் படி, பிரித்தானியாவிற்குள் நுழையும் பயணிகள், அவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.
இந்நிலையில், பிரித்தானியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை தேவைகளை ரத்து செய்ய வேண்டும் என டிராவல் துறையானது அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஒமிக்ரான் பாதிப்புகள் ஏற்கனவே பிரித்தானியாவிற்குள் மிக அதிகமாக உள்ளது மற்றும் கொரோனா பரிசோதனை தேவையை ரத்து செய்வது தற்போதைய சூழ்நிலையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும் என டிராவல் துறை வாதிட்டுள்ளது.