கர்ப்பிணி பெண்கள் இளநீர் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
தற்போது இருக்கும் இந்த பரபரப்பான உலகில் கர்ப்பமான பெண்கள் தங்கள் உடலுக்கு எது நல்லது? எதை எடுத்துக் கொண்டால், குழந்தைக்கும் நல்லது என்பதை பெரும்பாலும் அறிந்திருப்பது இல்லை.
அந்த வகையில், தற்போது கர்ப்பகாலத்தில் பெண்கள் இளநீர் எடுத்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது.
இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாக உள்ளது. அதுமட்டுமின்றி இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள் அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது.
வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் தொடர்ந்து இளநீர் குடித்து வருவதன் மூலம், அப்போது அவர்களுக்கு ஏற்படும், மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது.