அமெரிக்காவில் இடிந்து விழுந்த அடுக்கு மாடி குடியிருப்பில் குடும்பத்துடன் சிக்கியுள்ள பிரித்தானிய கர்ப்பிணிப்பெண்
அமெரிக்காவின் மியாமியில் 12 மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென நிலை குலைந்து சரிந்ததில் 159 பேரைக் காணவில்லை. வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்துவிழுந்ததில், அதில் வாழ்ந்து வந்த குடும்பங்கள் பல உயிருடன் மண்ணில் புதைந்துவிட்டன.
தற்போது, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் விவரங்கள் வெளியாகி வருகின்றன.
பிரித்தானியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்க குடியுரிமை கொண்டவருமான ஒரு கர்ப்பிணிப்பெண் தன் குடும்பத்துடன் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடைய பெயர் பாவ்னா பட்டேல் (38), அவர் தன் கணவர் விஷால் பட்டேல் (42) மற்றும் மகள் ஐஷானி (1) ஆகியோருடன் அந்த கட்டிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்.
மிகவும் அன்பான குடும்பம் என அவர்களை விமர்சிக்கும் குடும்ப நண்பரான விஷால் அபாஷ் என்பவர், தம்பதியர் தன் திருமணத்தின்போது மாப்பிள்ளை தோழர், மற்றும் மணப்பெண் தோழியாக இருந்ததை கண்ணீருடன் நினைவுகூருகிறார். உலகத்தில் வாழ்ந்த அந்த தேவதைகளை கடவுள் தன்னுடன் வாழ அழைத்துக்கொண்டார் போலும் என்கிறார் விஷால்.