விலையுர்ந்த பரிசை கேட்கும் இந்திய மாமியார்., கனேடிய கர்ப்பிணி பெண் குமுறல்
இந்தியரை திருமணம் செய்துகொண்ட கனேடிய பெண் ஒருவர், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும், தனது மாமனார் மாமியார் ஐபோன்களை பரிசாக கேட்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் பல இந்திய மக்களிடம் உள்ளது. ஆனால், அது எப்போதும் அப்படி இருக்காது, ஒவ்வொரு நபருக்கும் அவரவர் சொந்தப் போராட்டங்கள் இருக்கும்.
சமீபத்தில், கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இந்திய மாமியார் தன்னிடம் புதிய ஐபோன்களை அனுப்பச் சொல்வதை ரெடிட் தளத்தில் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியருடன் திருமணம்
கனடாவைச் சேர்ந்த அப்பெண், இந்தியரை திருமணம் செய்துகொண்டார். கர்ப்பமாக இருக்கும் அவர் இன்னும் சில வாரங்களில் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்.
அவரது குடும்ப சூழல் பொருளாதார ரீதியாக சரியாக இல்லை, குறிப்பாக குழந்தைக்காக கூடுதல் செலவுகள் இருப்பதால் பணப் பற்றாக்குறை உள்ளது.
ஐபோன் கேட்ட தாய் தந்தை
இந்த சூழலில், அவர்களுக்கு அதிக செலவுகள் இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளாமல் இருக்கும் அவரது கணவனின் தாய் தந்தையினர், தனது மகனிடம் இரண்டு புதிய ஐபோன்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனால் வருத்தமடைந்த அப்பெண், தனது ரெடிட் பக்கத்தில் இது குறித்து விவரித்துள்ளார்.
அவரது பதிவில், "எனக்கு இதைப்பற்றி புரிந்து கொள்ள உதவுங்கள். நான் கனேடியன், என் கணவர் இந்தியர். நாங்கள் கனடாவில் வசிக்கிறோம், அவருடைய குடும்பம் இந்தியாவில் உள்ளது. சில வாரங்களில் எங்கள் முதல் குழந்தையை வரவேற்போம்.
நாங்கள் கனடாவில் வாழ்கிறோம் என்பதாலேயே, நங்கள் பணக்காரர்களாக இருக்க வேண்டும், என்று எனது கணவரின் குடும்பத்தினர் நினைக்கிறார்கள். உண்மையில், நாங்கள் மிகவும் சிக்கனமாக இருக்கிறோம், குழந்தை பிறக்கவுள்ளதால் இப்போது மிச்சம் இல்லை.
இன்று அவரது பெற்றோர்கள் எங்களுக்கு 2 ஐபோன்களை பரிசாக வாங்கச் சொன்னார்கள், இங்கு எங்களுக்கே பணத்தேவை அதிகமாக இருக்கும் இதுபோன்ற முக்கியமான நேரத்தில், சொந்த மனைவி மற்றும் குழந்தையை பற்றி யோசிக்காமல், என் கணவரும் உண்மையில் அதை வாங்கி தர விரும்புகிறார் என்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தை பிறப்பதற்கு முன்பே பெரிய பரிசு கேட்பது இயல்பானதா என்பதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்" என்று அவர் இந்தியாவின் கலாச்சாரத்தையும் பெற்றோருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் பற்றி தான் உணர விரும்புவதாக பதிவிட்டுள்ளார்.
விமர்சனம் மற்றும் கருத்துக்கள்
இந்த பதிவிற்கு பல கருத்துக்கள் குவிந்துள்ளன, பலர் அறிவுரைகளை வழங்குகிறார்கள், மற்றவர்கள் இது போன்ற நேரத்தில் விலையுயர்ந்த பரிசுகள் கேட்பவர்கள் உணர்ச்சியற்றவர்கள் என்று அவரது மாமனார் மாமியாரை விமர்சித்துள்ளனர்.
பலரும், அப்பெண்ணின் மாமனார் மாமியார் இதனை தெரிந்து செய்திருக்க மாட்டார்கள், அவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் தங்கள் மகனின் உண்மையான சூழல் தெரிந்திருக்காது அல்லது சரியாக சொல்லப்பட்டிருக்காது. இந்தியப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது, தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். அதற்காக அவர்கள் இங்கு கடனில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களும் உள்ளன. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக நிறைய தியாகம் செய்கிறார்கள் என்று விளக்கியுள்ளனர்.
கணவருடன் சமரசம்
இந்நிலையில், பயனர்களின் கருத்துக்கள் மற்றும் பதில்களுக்கு அந்தப் பெண் நன்றி தெரிவித்தார், மேலும் அவர் தனது கணவருடன் மீண்டும் கலந்து பேசியதாகவும், இப்போது "குறைந்த விலையுள்ள, புதுப்பிக்கப்பட்ட தொலைபேசிகளை (அவர்கள் விரும்பியபடி ஐபோன் அல்லாமல், சாம்சங் போன்ற) போன்களை வாங்கி அனுப்பவுள்ளதாக சமரசம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.