ஒரே இரவில் பெரும் கோடீஸ்வரர் ஆன நபர்! கர்ப்பிணி நாயால் நடந்த ஆச்சரியம்
அமெரிக்காவில் ஒரே இரவில் பெரும் கோடீஸ்வரர் ஆன நபர் தனது வாழ்க்கை மாறியதற்கு காரணம் கர்ப்பிணி நாய் தான் என கூறியுள்ளார்.
ப்ளோரிடாவை சேர்ந்தவர் லியோனர்ட் லிண்டன் (42). இவர் லிவி என்ற பெண் நாயை வளர்த்து வந்தார். லிவி கர்ப்பமாக இருந்த நிலையில் அதற்கு உடல்நிலை சரியில்லை என லிண்டனுக்கு போன் வந்தது.
இதையடுத்து உடனடியாக லிவியை காண வேண்டும் என எப்போதும் செல்லும் வழியில்லாமல் வேறு வழியில் வீட்டிற்கு அவசர அவசரமாக பதற்றத்துடன் லிண்டன் கிளம்பினார்.
FLORIDA LOTTERY
அப்போது திடீரென Stop & Shop கடையில் வண்டியை நிறுத்திய லிண்டன் அங்கு சில பொருட்களை வாங்கியதோடு லொட்டரி சீட்டும் வாங்கினார். அந்த சீட்டுக்கு தான் $2 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ. 72,26,64,400) பரிசு விழுந்துள்ளது.
தனக்கு பரிசு விழுந்ததற்கு தனது நாய் லிவி தான் முழு காரணம் என லிண்டன் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை, இது என் வாழ்க்கையை மாற்றும்.
பரிசு பணத்தில் முதலில் லிவிக்கு புதிய கொட்டில் வாங்குவேன் என கூறியுள்ளார்.