நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமாரி, இவர் அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் சில மாதங்களில் செல்வகுமாரி கர்ப்பம் தரிக்க, இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.
தற்போது செல்வகுமாரி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.
வருகிற 27ம் தேதி வளைகாப்பு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக செல்வகுமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், செல்வகுமாரியின் இந்த முடிவால் இரு குடும்பத்தாரும் பேரதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் அதிகாரிகள் செல்வகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
என்ன நடந்தது? மன உளைச்சலில் இருந்தாரா? என்ற கோணத்தில் விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.