மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்: மகளுடன் பேச இரகசியக் குறியீட்டைக் கொடுத்த தாய்

United Kingdom
By Balamanuvelan Mar 31, 2023 05:35 AM GMT
Report

பிரித்தானியாவில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் மலையுச்சியிருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கில், அந்தப் பெண்ணின் தாய் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளா.

மகளுடன் பேச இரகசியக் குறியீடு

2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).

பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. தற்போது, ஹவ்ஸியாவின் கணவர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை தற்போது துவக்கப்பட்டுள்ள நிலையில், ஃபவ்ஸியாவின் தாயாகிய யாஸ்மின் (Nighat Yasmin Javed) சாட்சியமளிக்கும்போது சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்: மகளுடன் பேச இரகசியக் குறியீட்டைக் கொடுத்த தாய் | Pregnant Wife Pushed Arthurs Seat

Image: PA

ஃபவ்ஸியாவுக்குத் திருமணமாகி சில மாதங்களுக்குள்ளாகவே அன்வரின் முரட்டுத்தனம் குறித்து அவரது தாயாகிய யாஸ்மினுக்குத் தெரியவந்துள்ளது.

ஆனால், ஃபவ்ஸியாவின் மொபைலை கண்காணித்துக்கொண்டே இருந்திருக்கிறார் அன்வர். ஆகவே, மகளைக் குறித்து கவலையடைந்த யாஸ்மின், மகளிடம், உனக்கு ஏதவாது ஆபத்து என்று தோன்றினால் உடனடியாக, 'I feel like cream cakes' என்று எனக்கொரு குறுஞ்செய்தி அனுப்பு, உடனே நான் பொலிசாருக்குத் தகவலளிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

மருத்துவமனையிலிருந்து வந்த சாட்சிகள்

ஃபவ்ஸியா மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றிருந்தபோது, அங்கே வைத்தும் அன்வர் ஃபவ்ஸியாவை திட்டியதாக செவிலியர் ஒருவர் உட்பட சில பெண்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்கள்.

ஃபவ்ஸியா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் செவிலியராக பணியாற்றிய Elizabeth Petty (41), தன்னிடம் ஒரு பெண், ஃபவ்ஸியாவை அவரது கணவர், நீ பிரசவத்தின்போது செத்துப்போய்விட்டால் நல்லது, நான் தப்பிவிடுவேன் என்று கூறியதாக தெரிவிக்க, ஃபவ்ஸியாவிடம் அது குறித்து அந்த செவிலியர் கேட்க, பயந்துபோயிருந்த ஃபவ்ஸியா, தன் கணவர் மிரட்டியது உண்மைதான் என அவரிடம் கூறியுள்ளார்.

மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்: மகளுடன் பேச இரகசியக் குறியீட்டைக் கொடுத்த தாய் | Pregnant Wife Pushed Arthurs Seat

Image: Getty Images

ஃபவ்ஸியாவின் பக்கத்து படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியையான Francesca Cooper (34), அன்வர் தன் மனைவியை கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே இருந்ததாகவும், உன்னைத் திருமணம் செய்திருக்கவே கூடாது, பிரசவத்தின்போது நீ இறந்துபோனால் நன்றாக இருக்கும் என்று கூறியதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

வழக்கு விசாரணை தொடர்கிறது. 

மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்: மகளுடன் பேச இரகசியக் குறியீட்டைக் கொடுத்த தாய் | Pregnant Wife Pushed Arthurs Seat

Image: Yasmin Javed / SWNS

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US