டெக்சியிலேயே பனிக்குடம் உடைந்த கர்ப்பிணி: சாரதி செய்த செயல்
கர்ப்பிணிப்பெண் ஒருவர் டெக்சியில் பயணம் செய்யும்போதே குழந்தை பெற்றுள்ள நிலையில், அவர் தான் பயணித்த டெக்சியின் சாரதி செய்த செயலை மனதாரப் புகழ்கிறார்.
டெக்சியிலேயே உடைந்த பனிக்குடம்
இங்கிலாந்தின் Plymouthஐச் சேர்ந்த எபோனி (Ebony-Paige Blank, 23), ஷாப்பிங் சென்றிருந்தபோது, திடீரென அவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக டெக்சி ஒன்றில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார் அவர்.
ஆனால், வழியிலேயே பனிக்குடம் உடைந்து, காரிலேயே குழந்தை பிறந்துவிட்டிருக்கிறது எபோனிக்கு. ஏற்கனவே ஒரு குழந்தை பெற்றவர் என்பதால், பதறாமல் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார் எபோனி. குழந்தைக்கு Khai என பெயரிடப்பட்டுள்ளது.
Image: Erin Black/Plymouth Live
சாரதி செய்த செயல்
தனது காரில் பயணிக்கும் ஒரு பெண்ணுக்கு வழியிலேயே பிரசவம் ஏற்பட்டதால் சற்றே பதறினாலும், அவரை பத்திரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் காரின் சாரதி. அவரது பெயர் பாபி (Bobby Bailey).
காரிலேயே பனிக்குடம் உடைந்ததால் காரின் இருக்கை எல்லாம் ஈரமாகியுள்ளது. அதை கார் கழுவும் இடத்துக்குக் கொண்டு சென்றுதான் சுத்தம் செய்துள்ளார் பாபி.
ஆனால், தனது கார் ஈரமானதற்காக மட்டுமல்ல, எபோனியை மருத்துவமனையில் கொண்டு சேர்த்ததற்கும் பணம் வாங்கவில்லையாம் பாபி.
Image: Plymouth Live/BPM MEDIA
அவரை மனதார புகழ்கிறார் எபோனி. அத்துடன், மருத்துவமனைக்கு குழந்தையைப் பார்க்க வந்த பாபி, குழந்தை Khaiக்கு அழகான சட்டை ஒன்றையும், எபோனிக்கு ஒரு மலர்ச்செண்டையும், அவரது மூத்த குழந்தைக்கு சில பரிசுகளையும் வாங்கிவந்தாரம்.
பாபியிடம், என்ன நீங்கள் எபோனியிடம் டெக்சிக்கான கட்டணம் கூட வாங்கவில்லையாமே என்றால், நான் சரியான விடயத்தைத்தான் செய்தேன் என்று நம்புகிறேன் என்கிறார் எளிமையாக..
Image: Erin Black/Plymouth Live