பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி... கணவன் விட்ட கதை
கணவனுடன் தேனிலவுக்குச் சென்றிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண் மலை உச்சியிலிருந்து விழுந்த சம்பவத்தில், அவருடைய கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடந்தது என்ன?
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).
பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது.
உடற்கூறு ஆய்வில், ஃபவ்ஸியாவின் உடலில் அவர் தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக பல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முன்பு பலமுறை அன்வர் ஃபவ்ஸியாவை தாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அவர் மீது கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கணவர் விட்ட கதை
இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்றுவரும் நிலையில், மலையிலிருந்து விழுந்ததாக கூறப்பட்ட ஃபவ்ஸியாவை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
Sean Stratford என்னும் அந்த தீயணைப்பு வீரர், ஃபவ்ஸியா எங்கு விழுந்தார், அவர் எங்கே விழுந்துகிடக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் மீட்புக் குழுவினர் திணறிக்கொண்டிருந்தபோது, ஒருவர் அவரிடம் வந்து ஃபவ்ஸியா விழுந்த இடத்தை அடையாளம் காட்ட உதவியதாக தெரிவித்துள்ளார்.
sky news
அப்போது, அவர், தான்தான் விழுந்த பெண்ணின் கணவன் என கூறியதாக தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ள Mr Stratford, தான் செல்பி எடுக்க முயலும்போது வழுக்கி ஃபவ்ஸியாவின்மீது மோதிவிட்டதாகவும், அப்போது ஃபவ்ஸியா மலையிலிருந்து விழுந்துவிட்டதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நபர், அதாவது ஃபவ்ஸியாவின் கணவரான அன்வர், அந்த நேரத்தில் பதற்றமில்லாமல் அமைதியாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளார் Mr Stratford.
அத்துடன், ஃபவ்ஸியா விழுந்துவிட்டதாக அவசர உதவி எண்ணை அழைக்கும்போது, அன்வர் இந்த செல்பி விடயத்தைக் கூறவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார் Mr Stratford.