கணவனால் மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண் : பலிக்காமல் போன தப்பிக்கும் திட்டம்
பிரித்தானியாவில், மலையுச்சியிலிருந்து கணவனால் தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண், கணவனுடைய கொடுமைகளிலிருந்து தப்புவதற்காக போட்ட திட்டம் பலிக்காமலே அவர் கொல்லப்பட்டுவிட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிப்பெண்
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).
Image: Yasmin Javed / SWNS
பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது. அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறையில் செலவிடும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Image: PA
பலிக்காமல் போன தப்பிக்கும் திட்டம்
இந்நிலையில், கொடுமைக்கார கணவனிடமிருந்து தப்ப முடிவு செய்த ஃபவ்ஸியா ஒரு திட்டம் போட்டிருக்கிறார். அதாவது, கணவனுடன் விடுமுறைக்காக ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற அவர், அந்த சிறிய விடுமுறை முடிந்ததும், அங்கிருந்து அன்வர் வீட்டுக்குச் செல்லாமல், நேரடியாக தன் தாய் வீட்டுக்கு வர திட்டம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார் ஃபவ்ஸியாவின் தாயான Yasmin Javed (56).
Image: Daily Record
தாய் வீட்டுக்கு வந்த பிறகு, பொலிசார் உதவியுடன் தன்னுடைய பொருட்களை கணவன் வீட்டிலிருந்து எடுத்துக்கொள்ள திட்டம் வைத்திருப்பதாக தன் தாயிடம் கூறியுள்ளார் ஃபவ்ஸியா.
ஆனால், கணவனிடமிருந்து தப்பி வர இரண்டு நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், அதற்குள் மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்டு பரிதாபமாக பலியாகிவிட்டார் நான்கு மாத கர்ப்பிணியான ஃபவ்ஸியா!
Image: PA
Image: Daily Record
Image: Daily Record