பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண்களுக்கு £400 அறிவிப்பு! பட் ஒன் கண்டிஷன்..,
பிரித்தானியாவில் புகைப்பழக்கத்தை விடும் கர்ப்பிணி பெண்களுக்கு £400 ஷாப்பிங் வவுச்சர் வழங்கப்படும் என NHS அறிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு புகைபிடிப்பதை நிறுத்த நிதி சலுகைகளை வழங்குவது "பயனுள்ளது மற்றும் செலவு குறைக்கும்" (effective and cost effective) என்பதற்கான சான்றுகள் காட்டுகிறது என்று National Institute for Health and Care Excellence (NICE) மற்றும் பொது சுகாதார இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு புதிய என்ஹெச்எஸ் ஹெல்த் டிரைவின் கீழ் புகைபிடிப்பதை விட்டுவிட 400 பவுண்ட் வரை மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
வவுச்சர்களைப் பெறுவதற்கு முன்பு பெண்கள் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்பதை நிரூபிக்க உயிர்வேதியியல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தொற்றுநோய் காரணமாக சோதனை செய்வது மிகவும் கடினமாக இருக்கும் பட்சத்தில் , எப்படியும் வவுச்சர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறினர்.
ஒவ்வொரு 1,000 கர்ப்பிணிப் பெண்களுக்கும் வவுச்சர்களை வழங்கினால், அதில் குறைந்தது 177 பேர் புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
"பிரசவத்தின்போது சுமார் 10% பெண்கள் புகைபிடிப்பவர்கள் என்று அறியப்படுவதையும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் புகைபிடிப்பதன் குறிப்பிடத்தக்க உடல்நல பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இது போன்ற முயற்சிகள் தேவை" என்று NICE மையத்தின் இயக்குனர் டாக்டர் பால் கிறிஸ்ப் (Paul Chrisp) கூறுகிறார்