1 வருடமாக தம்பி படத்தை பார்த்து தினமும் அழுத கர்ப்பிணி பெண் தற்கொலை! வெளியான பின்னணி
தமிழகத்தில் தம்பி இறந்த துக்கத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). இவரது மனைவி கவுசல்யா (22). இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளான்.
மேலும் கவுசல்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கவுசல்யா வின் தம்பி நிதியரசன் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் கவுசல்யா மன வருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் அவரது தம்பி படத்தை தினமும் பார்த்து அழுது கொண்டே இருந்தார். தொடர்ந்து பாசமாக இருந்த தம்பி இறந்து விட்டானே? என நினைத்து புலம்பி கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று கவுசல்யா வீட்டில் திடீரென தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பொலிசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.