பிரித்தானியாவில் இவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் போட அரசு வலியுறுத்தல்!
கர்ப்பிணிப் பெண்களை உடனடியாக COVID-19 பூஸ்டர் தடுப்பூசி போடுமாறு பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்துகிறது.
COVID-19 தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியில், பிரித்தானிய அரசாங்கம் கர்ப்பிணிப் பெண்களை பூஸ்டர் டோஸ் போட வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம், ராயல் காலேஜ் ஆஃப் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் (RCOG) மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் மிட்வைவ்ஸ் (RCM) ஆகியவற்றின் நிபுணர்களுடன் சேர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
விளம்பரப் பிரச்சாரத்தில் பிரித்தானிய அரசாங்கம், COVID-19 நோயால் பாதிக்கப்படுவதால் ஏற்படும் கடுமையான அபாயங்கள் மற்றும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக COVID-19 க்கு எதிரான தடுப்பூசிகளைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளது.
விளம்பரப் பிரச்சாரத்தில், "தடுப்பூசி போட காத்திருக்க வேண்டாம்" என்று கூறி, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசியைப் பெறுமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை, UK மகப்பேறியல் கண்காணிப்பு அமைப்பின் தரவை மேற்கோள் காட்டி, COVID-19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் 96.3% பேர் மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு சுவாச ஆதரவு தேவைப்பட்டது என்றும் கூறியது.
UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) சமீபத்திய தரவு, தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு COVID-19க்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன என்பதைக் காட்டுகிறது.
ஏப்ரல் 2021 முதல், சுமார் 84,000 கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் மற்றும் 80,000-க்கும் அதிகமானோர் COVID-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.