என்ன ஒரு அழகான புகைப்படம்! மைதானத்தில் விராட் கோலியுடன் உரையாடிய ப்ரீத்தி!
மொகாலி மைதானத்தில் விராட் கோலியுடன் ப்ரீத்தி உரையாடிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப்பை வீழ்த்திய பெங்களூரு
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை மொகாலியில் ஐபிஎல் போட்டி 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் பஞ்சாப் அணி நாணய சுழற்சியில் வென்றது. அணியின் கேப்டன் சாம் கரண் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
பின் களத்தில் இறங்கிய பெங்களூரு அணி, இப்போட்டியின் முடிவில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் பின்பு, 175 ஓட்டங்கள் இலக்குடன் பஞ்சாப் அணி மைதானத்தில் களத்தில் இறங்கியது. இப்போட்டியின் முடிவில், பெங்களூரு அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
விராட் கோலியுடன் ப்ரீத்தி உரையாடல்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், மைதானத்திற்கு வந்த நடிகையும், PBKSன் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா , விராட் கோலி உட்பட அனைத்து RCB வீரர்களுடன் களத்தில் உரையாடினார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Virat Kohli, Faf Du Plessis and Preity Zinta after the today's match. pic.twitter.com/0NDwVfDJtq
— CricketMAN2 (@ImTanujSingh) April 20, 2023
What Virat and Shikhar are talking!?!
— Anuj (@basEkpagal) April 20, 2023
Must be talking about how Maxi and Faf flirts Preity zinta pic.twitter.com/DxkopKUYkv