பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் கருத்தடை! நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு
பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் கருத்தடை செய்ய வேண்டும் என்ற இத்தாலிய பிரதமரின் திட்டத்திற்கு பிரீத்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களுக்கு எதிரான புதிய திட்டம்
பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் கருத்தடை செய்ய வேண்டும் என்ற இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனியின் திட்டத்தை பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை பாராட்டி, இந்தியாவிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
What a fantastic move ! Hope @mygovindia also does sometime similar. What do you think folks ? It’s high time there is zero tolerance for such crimes. https://t.co/gXqMjMwtwX
— Preity G Zinta (@realpreityzinta) December 18, 2024
மெலோனி தலைமையிலான இத்தாலிய அரசு, பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான சட்டங்களை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை குறைப்பு மருந்துகளை கொடுப்பது குறித்த சட்டத்தை வரைவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ப்ரீத்தியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சிலர் அவரது கருத்தை ஆதரித்தாலும், சிலர் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தப்படலாம் என்றும், பொய் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரீத்தி ஜிந்தா மீள் வருகை
பிரீத்தி ஜிந்தா, இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியின் அடுத்த படம் 'லாகோர் 1947' மூலம் ஹிந்தி சினிமாவில் மீண்டும் பிரவேசிக்க தயாராக உள்ளார்.
ஆமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சன்னி தேவோல் மற்றும் அமீர் கான் இணைந்து நடிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |