அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த நடிகர் பிரேம் ஜி! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
பிரபல திரைபப்ட நடிகரான பிரேம்ஜி குறித்து அவருடைய தந்தை கங்கை அமரன் தெரிவித்திருக்கும் தகவல் குடும்பத்தினர் மட்டுமின்றி, ரசிகர்கள் பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் தந்தை, மகன், தம்பி என சில பிரபலங்கள் அறிமுகமாகியிருந்தாலும், கங்கை அமரன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
அந்தளவிற்கு இவர்கள் தந்தை, அண்ணன், தம்பி போல் இல்லாமல், ஒரு சாதரண நண்பர்கள் போன்று இருப்பர். அதிலும் பிரேம் ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
நான் எப்போதும் சிங்கிள் தான் என்று பிரேம் ஜி கூறிக் கொண்டே இருப்பார். ஆனால், சமீபத்தில், அவருடைய தாயார உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இது ஒட்டு மொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கங்கை ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அம்மாவின் மறைவுக்கு பிறகு பிரேம்ஜி பெரும் சோகத்தில் உள்ளார். அம்மாதான் அவருக்கு ரொம்ப நெருக்கம். எப்போதும் அம்மாவுடனே இருப்பார்.
அவர் இப்போது இல்லாததால் நொறுங்கி போயுள்ளார்.
அவரது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். அவரது அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் முடிந்ததும் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.