விஜயகாந்தை எப்படி பாத்துக்கணும்னு எங்களுக்கு தெரியும்: இயக்குநர் பாண்டிராஜூக்கு பிரேமலதா பதில்
விஜயகாந்திற்கு இப்போது நல்ல ஓய்வு தேவை என்று இயக்குநர் பாண்டிராஜ் கூறிய நிலையில், அவரை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என பிரேமலதா ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.
பாண்டிராஜ் கூறியது...
நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முடிந்த நிலையில் குணமாகி வீடு திரும்பினார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த விஜயகாந்தை அவரது உதவியாளர்கள் வீல் சேரில் அழைத்து வந்தனர். அப்போது, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கோஷமிட்டனர். சிலர் விஜயகாந்தை பார்த்து கண்ணீர் சிந்தினர்.
இதனால் இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கேப்டன் விஜயகாந்திற்கு இப்போது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள். ப்ளீஸ். பிடித்த ஒரு 'நல்ல மனிதரை' இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது" என்று வேதனையுடன் பதிவிட்டிருந்தார்.
பதிலளித்த பிரேமலதா
இயக்குநர் பாண்டிராஜ் கருத்திற்கு தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரேமலதா, "மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். ஏதோ ஒன்று பதிவிட வேண்டும் என்று பதிவிடாதீர்கள்.
இது ஒன்றும் சினிமா அல்ல, கட்சி. அவரை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் . உங்கள் அறிவுரைக்கு ரொம்ப நன்றி" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |