எழுந்திருங்க விஜயகாந்த்..!கண்ணீர் விட்டு கதறி அழுத மனைவி பிரேமலதா விஜயகாந்த்
தே.மு,தி.க தலைவர் விஜயகாந்த் உடலை பார்த்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு கதறி அழுதது தொண்டர்கள் இதயத்தை நொறுக்கியுள்ளது.
விஜயகாந்த் காலமானார்
சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானார்.
கதறி அழுத பிரேமலதா விஜயகாந்த்
இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டது. அப்போது சில தொண்டர்கள் ஆம்புலன்ஸை தட்டி “கேப்டன் எழுந்திடுங்க” என கதறி முழக்கமிட்டனர்.
விஜயகாந்த் உடல் கூடவே பயணம் செய்த அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், கணவர் விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
மனைவி பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு கதறி அழுதது தொண்டர்கள் இதயத்தை நொறுக்கியுள்ளது.
சமீபத்தில் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |